Community Development project at Placepalayam – News Paper Publish

சென்னை நந்தவனம் ரோட்டரிகிளப் மூலம், திருவள்ளூர் மாவட்டம் ப்ளஸ்ப்பாளயத்தைச் சார்ந்த 100 நலிந்த கிராமப்புற ஏழை பெண்களுக்கு புடவையும் , 50 பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கற்றல் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது.

சென்னை நந்தவனம் ரோட்டரிகிளப் தலைவர் திரு தயாளன் அவர்களும் மாவட்ட துணை ஆளுநர் கணேஷ் கோபாலன் அவர்களும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இப்பொருட்களை வழங்கினர். அப்போது, மாவட்ட துணை ஆளுநர், 36000 ரோட்டரி சங்கங்கள் உலகம் முழுவதும் 12 லட்சம் உறுப்பினர்களுடன் செயல்படுவதாகவும் போலியோ ஒழிப்பில் மிகப்பெரும் பங்காற்றியதாகவும் சுட்டிக் காட்டினார் . செயலாளர் டாக்டர் நபின் மற்றும் பொருளாளர் திரு தில்லி பாபு அவர்களும் குழந்தைகளுக்கு கல்விப் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில் . பல்லவ ரோட்டரியின் தலைவர் திரு பாஸ்கரன், சென்னபட்னா கிளப்பின் தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில்சென்னை நந்தவனம் ரோட்டரி கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொருட்களைப் பெற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் ரோட்டரிக்கு தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். கற்றல் பொருட்கள் தங்கள் கல்விக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்துவதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர். ரோட்டரி கிளப்பின் சமூக சேவைகளின் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நன்றி உரை வழங்கினார்

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

X